நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் நேற்று (மார்ச் 9) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்குச் சொந்தமான சொகுசு கார் அவரது வீட்டு வாசலில் வழக்கம்போல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. புகைமூட்டதுடன் கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்து, தீயை அணைக்க முயன்றனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, தீயை அணைத்தும் கார் எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிவதற்கான காரணம் குறித்து, காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.