ETV Bharat / state

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட ஆற்றின் தடுப்புச்சுவர் சரிவு! - Nagai District News

நாகை: தரங்கம்பாடி அருகே வீரசோழன் ஆற்றில் தண்ணீர் வந்த நிலையில் பாசனத்திற்காக திறந்தவிடப்பட்ட தண்ணீரால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் சரிந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

தரமற்றமுறையில் அமைக்கப்பட்ட ஆற்றின் தடுப்புசுவர்

author img

By

Published : Jun 27, 2020, 11:58 AM IST

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறை வந்து சேர்ந்து கிளை ஆறுகள் பாசன வாய்கால்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீரசோழன் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது தரங்கம்பாடி தாலுகா அரும்பாக்கம் பகுதிக்கு வந்துசேர்ந்தது. முன்னதாக வீரசோழனாற்றில் குடிமராமத்துப் பணிகளைப் பொதுப்பணித் துறையினர் அவசர அவசரமாகச் செய்து முடித்தனர்.

இதில், அரும்பாக்கம் பகுதியில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் வீரசோழனாறு, அதிலிருந்து பிரிந்துசெல்லும் குறும்பகுடி வாய்க்கால், சேந்தவராயன் வாய்க்காலில் குடிமராமத்துப் பணிகளில் வீரசோழன் ஆறு சட்ரஸில் உள்ள ரெகுலேட்டர், தரைத்தளம் அமைத்தல், கரைப் பாதுகாப்புத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.

இந்நிலையில் வீரசோழனாற்றிலிருந்து பாசனத்திற்காக குறும்பகுடி வாய்க்கால், சேந்தவராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்கால்களில் தண்ணீர் சென்றதால் புதிதாக அமைக்கப்பட்ட கரைப் பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சரிந்ததால் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் துரைராஜ்

இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் துரைராஜ் செய்தியாளர்களிடம், “தரங்கம்பாடி அருகே அரும்பாக்கத்தில் வீரசோழனாற்றில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கரைப் பாதுகாப்புச் சுவர் இடிந்துள்ளது.

மேலும் சங்கரன்பந்தலில் நடைபெற்ற சட்ரஸ் அமைக்கும் பணியும் முழுமையாகப் பூர்த்தியடையவில்லை. தமிழ்நாடு அரசு திட்டமிட்டே தூர்வாரும் பணி, குடிமராமத்துப் பணிகளுக்குத் தண்ணீர் திறப்பதற்கு 20 நாள்களுக்கு முன்பு நிதி ஒதுக்கியுள்ளது.

இதனால், அரசு ஒதுக்கிய ரூ.500 கோடி பணம் தண்ணீரோடு போய்விட்டது. தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணி தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

இதுவரை எவ்வளவு விழுக்காடு பணிகள் மீதமுள்ளது என்பதைக் கணக்கிட்டு வேலை செய்யப்படாத பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை அரசு வழங்கக் கூடாது” என்றார்.

இதையும் படிங்க: பணி ஆணையின்றி ஆளுங்கட்சியினர் குடிமராமத்து வேலை: குண்டு பெரும்பேட்டில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.