கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக குழந்தைகளை வெளியே விளையாடச் செல்லாமல் கவனிப்பது என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமான பணியாக மாறி இருக்கிறது. இதனை புரிந்துகொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முன் மாதிரியாக ஒரு புது உத்தியை நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது.
அதாவது, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் அம்மாக்களுக்கு, வகுப்புவாரியாக பிரித்து வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி, அதில் 2 நாள்களுக்கு ஒருமுறை ஏதேனும் கல்விசார் வேலைகள், ஓவியம் உள்ளிட்ட டாஸ்க்குகளை வழங்கி வருகிறது. மேலும், அந்த வீட்டுப்பாட டாஸ்க்குகளை படம் எடுத்து வாட்ஸ் ஆப் குரூப்பில் அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால், மாணவர்கள் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை விடுமுறையை பயனுள்ள முறையில் கழித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :விவசாயிகள் கொள்முதல் செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் - முதலமைச்சர் அறிவிப்பு