மயிலாடுதுறை: பல்லவராயன்பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஸ்ரீனிவாச பெருமாள் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனைக்குப்பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியே நடைபெறும் தேரோட்டம் இறுதியாக ஆலயத்தை வந்தடைந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை - திண்டுக்கல் விரைவு ரயில் இனி செங்கோட்டை வரை இயங்கும்