ETV Bharat / state

ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க ஆறு வகை கருவிகள் - அசத்தும் நாகை மெக்கானிக்!

நாகை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கும் குழந்தைகளை உயிருடன் மீட்க ஆறு வகையான நவீன கருவிகளை கண்டுபிடித்து அசத்தியுள்ள நாகையை சேர்ந்த மெக்கானிக்...

author img

By

Published : Oct 14, 2020, 4:40 PM IST

special-story-borewell-rescue-tool-invention

மதுமிதா - விழுப்புரம், கிர்டான் ப்ரனாமி - குஜராத், தரவத் மகேஷ் - ஆந்திரா, அன்கிட் - ராஜஸ்தான்... நீளும் இந்தப் பட்டியலில் திருச்சி - சுர்ஜித் என்ற பெயர் அனைவருக்கும் நினைவு இருக்கும் என்று நம்புகிறோம்.

'அறம்' திரைப்படத்தில் வரும் 'தன்ஷிகா' என்ற கதாபாத்திரத்தை ஒட்டிய வயதுடையவர்கள்தான் இவர்கள். கடந்த சில வருடங்களாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியா தொழில்நுட்பத்தில் மேலோங்கி இருந்தாலும், 'உலகை ஆளும் டெக்னாலஜி நபர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்தான்' என மார்தட்டிக் கொள்ளும் நமக்கு போர்வெல் குழாயில் விழுபவர்களை மீட்க இருப்பது இரண்டே முறைதான்.

ஒன்று கயிறு கட்டிக் குழந்தையை இழுப்பது, மற்றொன்று அதனருகில் அதே போன்றதோர் ஆழ்துளை கிணறு தோண்டி ஆட்களை அனுப்பி மீட்பது.

வளர்ந்து வரும் நாடுகள் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கிக் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறது. ஆனால் நம் நாட்டிலோ இன்னமும் கழிவுநீர்த் தொட்டியில் இறங்குபவர்களுக்கும், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுபவர்களை மீட்கவும் பழைய முறையையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறுசிறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட அவை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதில்லை.

இதனை சரிசெய்ய இந்தியாவில் ஆழ்துளை கிணறு மரணங்களைத் தடுக்க நாகையைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் ஆறு வகையான கருவிகளை கண்டு பிடித்துள்ளார். இந்த கருவிகளை அரசு சோதனைக்குட்படுத்தி அங்கீகாரம் வழங்கினால் இறப்புகளை தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை அவரின் பேச்சில் துளிர் விடுகிறது.

மெக்கானிக் நாகேந்திரன்
மெக்கானிக் நாகேந்திரன்

"விவசாயதிற்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாத காரணத்தால், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். அவ்வப்போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் உயிரிழப்புகளை வெறும் செய்தியாகவே கடந்து செல்கிறோம். ஆனால் குழந்தையை மீட்கும் அதிகாரப்பூர்வ கருவியை நாம் இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த கடைசி குழந்தை திருச்சியை சேர்ந்த சுஜித்தாக இருக்கவேண்டும் என்று சபதமேற்று குழந்தை மீட்கும் கருவியை கண்டுபிடித்துள்ளேன்" என்கிறார் நாகை மாவட்டத்தை சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன், கிழக்கு கடற்கரை சாலையில் வெல்டிங் டிங்கரிங் பட்டறை ஒர்க்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்பதற்காக ஏதாவது கருவி செய்ய வேண்டும் என்று 3 மாதங்களாக இரவு பகலாக ஈடுபட்டு 6 வகையான கருவிகளை உருவாக்கியுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட ஆறு வகையான கருவிகள் மூலம், குழந்தையை மீட்கும் முறையை விவரிக்கும் நாகேந்திரன், "முதலில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தவுடன் அருகிலேயே ஒரு மின்விசிறியால் காற்று செல்லும் பகுதியை சாக்கு கொண்டு மூடி சிறிதளவு வட்டவடிவில் துளை அமைத்து சிறிய நெகிழ்வு குழாயைப் பயன்படுத்தி காற்றை குழந்தை விழுந்துள்ள குழாய் உள்ளே செலுத்தி காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர் தயார் நிலையில் உள்ள கருவியை பக்கத்தில் செலுத்தி குழந்தை கீழே இறங்காமல் தடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு

அதனைத் தொடர்ந்து கைகள் போன்ற மீட்பு கருவியை உள்ளே செலுத்தி குழந்தையின் தலை பாகத்தை பிடித்தவாறு குழந்தையை மேலே தூக்க வேண்டும். அந்தக் கருவியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குழாயில் உள்ள குழந்தையின் வடிவம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து குழந்தையை எளிதாக தூக்க முடியும். குழந்தை நேராக விழுந்திருந்தாலும் சரி, தலைகீழாக விழுந்தாலும் சரி, கைகளை மேலே வைத்தவாறு விழுந்திருந்தாலும் கூட குழந்தையை மீட்பதற்கான 6 விதமான கருவிகள் தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைக்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் உயிருடன் மீட்க முடியும்'' என்கிறார் நாகேந்திரன்.

மேலும், இந்த கருவியின் மூலம் எவ்வளவு ஆழத்தில் விழுந்த குழந்தையை வேண்டுமானாலும், எந்த ஒரு பாதிப்பும் இல்லாத அளவுக்கு மீட்டெடுக்க முடியும் என்று சொல்லும் நாகேந்திரன், இந்த கருவி மூலம் எவ்வளவு கிலோ எடையுள்ள குழந்தையும் கூட மேலே தூக்க முடியும் என கூறுகிறார்.

இந்த கருவி வடிவமைப்பதற்காக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை அரசு சோதனைக்கு உட்படுத்தி அங்கீகாரம் செய்ய வேண்டும்.

கருவிகள் மூலம் கிணற்றில் விழுந்த மான், ஆடு, மாடு, அல்லது வேறு ஒரு பொருளையோ மீட்க புது கருவி செய்யும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார் நாகேந்திரன்.

இந்த முயற்சியை மத்திய, மாநில அரசுகள் பரிசோதனை செய்து அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள மக்கள், அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மதுரை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான சிறிய அளவிலான கருவிகளை வடிவமைத்துள்ளனர். ஆனால், அவற்றை ஆழம் அதிகமுள்ள இடங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளித்து உதவினால், கண்டுபிடிப்பில் உள்ள சிறு குறைகளும் களையப்பட்டு முழுமையானதொரு கருவியைக் கண்டுபிடிக்கமுடியும். பல உயிர்களையும் காப்பாற்ற முடியும்.

பொருளாதாரம், வாழ்வாதாரம், தொழில் வசதி எனப் பல்வேறு விஷயங்களிலும் தன்னிறைவு கொண்ட நாடாக இருக்கிறது இந்தியா என்று பெருமைபட்டுக் கொள்கிறோம். ஆனால், அதே இந்தியா அடிப்படையான விஷயங்களில் படுமோசமாக பின்தங்கியுள்ளது என்பதை எல்லோருமே கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அலட்சியங்களே 'ஆழ்துளைக் கிணறு விபத்து'களில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அடுத்த ஆழ்துளை விபத்து நடைபெறுவதற்குள் இவ்விஷயத்தில், நல்லதொரு தீர்வைக் கண்டுபிடிக்கும் செயலில் இறங்கவேண்டும்.

இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.