ETV Bharat / state

சாம்பல் புதன்: உக்ரைனில் அமைதி திரும்ப சிறப்புப் பிரார்த்தனை - கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

வேளாங்கண்ணி பேராலம்
வேளாங்கண்ணி பேராலம்
author img

By

Published : Mar 2, 2022, 8:05 PM IST

நாகப்பட்டினம்: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3ஆவது நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று(மார்ச்.2) சாம்பல் புதன் தொடங்கியது. இதையொட்டி நாகை மாவட்டத்தின் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது.

பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்கால சிறப்புத்திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் அருட்தந்தை இருதயராஜ், பங்குத்தந்தை டேவிட் ராஜ் உள்ளிட்ட பாதிரியார்கள் சாம்பல் விபூதி பூசி 40 நாள் தவக்காலத்தைத் தொடங்கி வைத்தனர்.

வேளாங்கண்ணி பேராலயம்

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர பிரார்த்தனை

கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி, கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் பூசும் சாம்பல் விபூதி கையில் கொடுக்கப்பட்டது. தற்போது, பொதுமக்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தமிழ்நாட்டில் தொற்றுப்பாதிப்பு குறைந்து வருவதால் வழக்கம்போல் கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பல் விபூதியிடப்பட்டது.

இந்த சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலியில் உலக மக்கள் சமாதானமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டியும், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அமைதி ஏற்படவும், போரின்போது உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பதவிக்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.