ETV Bharat / state

பேருந்து மீது பைக் மோதி ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு! - அரசு பேருந்து மீது பைக் மோதி விபத்து

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பேருந்து மீது பைக் மோதி ஊர்க்காவல் படையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 9, 2021, 6:28 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா விநாயகக்குடியைச் சேர்ந்தவர் அருண் (30). இவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்துவருகிறார். இவரது நண்பர் ராஜராஜனும் இவரும் இருசக்கர வாகனத்தில் விநாயக்குடியிலிருந்து திருமுல்லைவாசலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

இதனையடுத்து, எடமணல் என்ற இடத்தில் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அருண் முயன்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்துசென்ற ராஜராஜன் படுகாயத்துடன், சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சீர்காழி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க...ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கரோனா தடுப்பூசி-மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.