மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா, பழையாறு மீன்பிடித் துறைமுகம் அருகே இன்று (ஆகஸ்ட் 31) காலை 5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் கூடிய மூன்று வயது திமிங்கல சுறா இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், புதுப்பட்டினம் பகுதி வனவர் செல்லையா தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாதானம் கால்நடைத் துறை மருத்துவர் மணிமொழி கரையொதுங்கிய திமிங்கல சுறாவை உடற்கூராய்வு செய்தார். இதையடுத்து திமிங்கல சுறாவின் உடல் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு புதுப்பட்டினம் காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தாயால் தாக்கப்பட்ட குழந்தை - வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த அமைச்சர்