மயிலாடுதுறையில் வசித்துவரும் வினோத் கண்ணா (22), 17 வயது சிறுமியை தனியே குளிக்கும்போது மறைந்துநின்று செல்போன் மூலம் படம்பிடித்துள்ளார்.
இதைக்கண்ட சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்து அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், இந்தச் சிறுமிக்கும் தருமபுரம் ஆலமரத்தடியைச் சேர்ந்த நவீன் (23) என்பவருக்கும் மூன்றாண்டுகளாகத் தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொண்ட வினோத் கண்ணா இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் துறையினர் இரண்டு இளைஞர்களையும் பிடித்துச் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் நவீன் என்ற இளைஞர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததை அறிந்துகொண்ட வினோத் கண்ணா, அச்சிறுமி குளித்ததை செல்போன் மூலம் படம் எடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு இளைஞர்கள் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பிரபல தொலைக்காட்சி நடிகரின் வீட்டிலிருந்து போதைப்பொருள்கள் பறிமுதல்!