நாகையில் நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெங்கட்ராமன்.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றிய போது, பெண் உதவி ஆய்வாளருக்கு ஒருவருக்கு, தொலைபேசி வாயிலாக ஆபாச வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் ஆய்வாளர், உயர் அலுவலர்களிடம் கொடுத்த புகாரில் டிஎஸ்பி வெங்கட்ராமன் நாகர்கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பணி ஓய்வு பெற இருந்த வெங்கட்ராமன், தனக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்ததின் பேரில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
அப்போது, வெங்கட்ராமன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், வெங்கட்ராமனை பணி நீக்கம் செய்ய உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டின் உத்தரவிட்டுள்ளார்.