ETV Bharat / state

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியை ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம் - ஆதீனம் நிகழ்ச்சியில் கவர்னர்

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆதீன நிகழ்ச்சியை ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம் என கோரிக்கை மனு ஆத்திரத்தில் ஒப்படைப்பு

author img

By

Published : Apr 17, 2022, 9:20 PM IST

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானம் பங்கேற்க உள்ளார். அந்த வகையில் வரும் 19ஆம் தேதி ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், தருமபுரம் ஆதீன மடத்துக்கு மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், மத்திய அரசு தமிழ்மொழி, தமிழ் மக்களின் உணர்வுக்கும் எதிராக செயல்படுவே ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்துள்ளது. அவரும் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தீர்மானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, கிடப்பில் போட்டு வருகிறார். இந்த சூழலில் ஆளுநரை வைத்து ஞானரத யாத்திரை நடத்த வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... நிலத்தகராறில் ஓட ஓட அரிவாள் வெட்டு... மூன்று பேர் மரணம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.