ETV Bharat / state

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழப்பு - விபத்துச் செய்திகள்

நாகை திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுலாப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து
சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Apr 10, 2022, 9:13 PM IST

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் நிரஞ்சன். இவர், 44 பேருடன் கடப்பாவிலிருந்து சுற்றுலாவிற்காக கடந்த 8ஆம் தேதி புறப்பட்டார். நேற்றிரவு வேளாங்கண்ணியில் தங்கியிருந்த அவர்கள் இன்று (ஏப்.10) காலை சிறப்பு பிரார்த்தனையை முடித்துவிட்டு ராமேஸ்வரம் நோக்கிச் சென்றனர்.

திருப்பூண்டி காரைநகர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் முன்பக்க டயர் அச்சு முறிந்ததாக தெரிகிறது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், பேருந்தில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்தில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழந்தார்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் உணவுகள் வழங்கப்பட்டது. மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உள்ளிட்ட காவல் துறையினர், ஆய்வு செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல்லாவரம் அருகே தொடர் கொள்ளை; 86 சவரன் தங்க நகைகள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.