மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் மனுதாரர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மேலும் மயிலாடுதுறை காவல் உபகோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், செம்பனார்கோவில், பாலையூர், பெரம்பூர் மற்றும் பாகசாலை ஆகிய 7 காவல் நிலையங்களில் தீர்க்கப்படாமல் இருந்த 10க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
முடிவில், தீர்க்கப்படாமல் இருந்த 7 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. வெகு நாள்களாக தீர்க்கப்படாமல் இருந்த வழக்குகள் உடனடியாக தீர்க்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட வழக்காடிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: அக். 11 முதல் 17 வரை கிராம சபை மீட்டு வாரமாக கடைப்பிடிக்க வேண்டுகோள்!