காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் வேலைவாய்ப்பை இழந்து, வருவாய் இன்றி குடும்பத்தை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் சுய உதவி குழு பெண்கள் ஏராளமானோர் மைக்ரோ பைனான்ஸ் மூலமாக தவனை கடன் பெற்றுள்ளனர்.
தற்போது ஊரடங்கு காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களை தனியார் நிதி நிறுவனமான மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் கடனை உடனடியாக திருப்பி செலுத்தக் சொல்லி நேரடியாகவும், தொலைபேசி மூலமாக மிரட்டுவதாவும், பெண்கள் என்றும் பாராது தகாத வார்த்தையில் பேசி வசூலித்துள்ளனர்.
எனவே, இது குறித்து நடவடிக்கை எடுத்து, தவணை தொகையை செலுத்த இந்த மாத காலம் அவகாசம் வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவை சந்தித்து பெண்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: காத்திருந்து மோசம் போயிட்டோம்: அரசுதான் எங்களை காக்க வேண்டும்