நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சிவபுரி (45) என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரின் அடகு கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்ட உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து லாக்கரை உடைத்து 1 கிலோ தங்க நகைகள், 25 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், திருட்டில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹாட்ர்டிஸ்க்கையும் எடுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த கொள்ளிடம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.