நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு அண்ணன் பெருமாள் கோயிலில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்தத் தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணன் பெருமாளை தரிசித்துச் சென்றனர்.