மயிலாடுதுறை : அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளியில் கிராமப்புறங்களில் இருந்து வந்து படிக்கு மாணவர்களை பெற்றோர் தனியார் வேனில் அனுப்பி வருகின்றனர். அதேபோல் இன்று மாலை பள்ளி முடிந்து மயிலாடுதுறையிலிருந்து மாப்டுகை, சோழம்பேட்டை, திருமங்களம் வழியாக காளிவரை செல்லும் தனியார் வேன் (மேக்சிகேப் வேன்) 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிகளிலில் இருந்து ஏற்றிகொண்டு கூறைநாடு வடக்குசாலியத்தெரு வழியாக காளிநோக்கி சென்றது.
அப்போது, வடக்குசாலியத்தெருவில் உள்ள பாதாளசாக்கடை ஆள்நுழைவுதொட்டி(மேனுவல்) மூடியில் வேன் ஏறிவ் இறங்கிய போது மூடியானது சக்கரத்தில் சிக்கி இழுத்து சென்றது. இதில் வேன் ஆக்சில் கட்டாகி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்நிலையில், வேன் டிரைவர் கடுவங்குடியை சோந்த மனோகர் எனபவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் வேனில் சிக்கிதவித்த மாணவ, மாணவிகளை அப்பகுதி பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதில் ராமாபுரம் வர்ஷினி(11), திருமங்கலம் ரோகித்(12), ஆனந்தகுடி மனிஷா(11), திருமங்கலம் யாசினி(14), மாப்படுகை சத்திபிரியா(17), ஆர்த்தி(16), வினேஷ்(11), ஜெயஸ்ரீ(9), கனிஷா(5), ரத்னாஸ்ரீ(13), ஜனனி(14) உட்பட 24 மாணவ, மாணவிகள் காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி. வசந்தராஜ், காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றிசென்ற வேன் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரில் பாதாளசாக்கடை ஆள்நுழைவுத்தொட்டி மூடிகள் சரிவர பொறுத்தாததாலும், தனியார் வேன் அதிவேகமாக வந்தாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு பாதாளசாக்கடை பிரசனைக்கு நிரந்தர தீர்வுகான வேண்டுமென்றும், இதுபோன்று தனியார் வாகனங்கள் அரசு விதிமுறையை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : கோயிலுக்குள் சரிந்து விழுந்த வேப்பமரம் - உயிர் தப்பிய பக்தர்கள்