நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லாடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 136 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.
இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியரான நாராயண பிரசாத் (57) என்பவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் புகார்கள் வந்துன. இந்நிலையில், மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியருக்கு தெரியாமல், கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர், திருச்சி, கல்லணை ஆகிய பகுதிகளுக்கு ஒருநாள் கல்வி களப்பணி சுற்றுலா அழைத்துச் சென்ற நாராயண பிரசாத், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதை வெளியே சொன்னால் செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தற்போது செய்முறை தேர்வுக்கான போடப்பட்ட நிலையில், சில மாணவிகள் நாராயண பிரசாத்தின் அத்துமீறல் குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தலைமை ஆசிரியர் இளவரசன் 15 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவியிடம் இளவரசன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் நாராய பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தன் மீது நடவடிக்கை பாயும் என்பதால், நேற்று நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நாராய பிரசாத், விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பம் அளித்துள்ளார்.
மேலும் அவர் பள்ளிக்குசெல்லாததால் அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க... உன்னாவ் பாலியல் வழக்கு: முன்னாள் பாஜக எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு சிறை!