உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வகையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, வழக்கின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், முக்கிய குற்றவாளியான குல்தீப் செங்கார், அவரது சகோதரர் அதுல் செங்கார் இருவரும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.