நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா மல்லியம் ஊராட்சியில், ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனை சரிசெய்யும் நோக்கில், தனியார் தொண்டு நிறுவனங்கள் அதிகளவில் மரம் நடும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று (ஜூலை25) மல்லியம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல தனியார் வங்கி மற்றும் இணைந்த கைகள் தொண்டு நிறுவனம் இணைந்து மரம் நடுவிழா நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் ஐந்து வயது சிறுவன், மரங்களின் நன்மை பற்றி பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.