ETV Bharat / state

சம்பா சாகுபடி; 20ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: சம்பா சாகுபடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நான்கு மாவட்டங்களில் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

demanding water
author img

By

Published : Aug 29, 2019, 5:53 PM IST

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் இதுவரை காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன் செய்யவேண்டிய தூர்வாரும் பணியை தற்போது செய்துகொண்டிருப்பதால் கூடுதல் தண்ணீர் திறக்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு கூறிவருகிறது. அந்த பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, விவசாய பணிகளைத் தொடங்க 20 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் விவசாயிகளை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.

செய்தியாளர்களை சந்தித்த சண்முகம்

சம்பா சாகுபடி தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் உழவு மானியம் ஏக்கருக்கு 600 ரூபாய் என 5 லட்சம் ஏக்கருக்கு மட்டும் அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும். அதனை தவிர்த்து உழவு மானியத்தை சம்பா சாகுபடியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

அதேபோல் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மோட்டார் பாசனம் மூலம் நிலத்தடி நீரை கொண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Intro:சம்பா சாகுபடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நான்கு மாவட்டங்களில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் முடிவு.

Body:சம்பா சாகுபடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நான்கு மாவட்டங்களில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் முடிவு.

நாகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து 15 தினங்களுக்கு மேல் ஆகிய நிலையில் இதுவரை காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை, இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், அரசு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன் செய்யவேண்டிய தூர்வாரும் பணியை தற்போது செய்து கொண்டு, தூர்வாரும் பணி நடைபெறுவதால் கூடுதல் தண்ணீர் திறக்க முடியவில்லை என தமிழக அரசு கூறிவருகிறது என குற்றம்சாட்டிவர். தூர்வாரும் பணியை தமிழக அரசு உடனடியாக நிறுத்திவிட்டு, விவசாய பணிகளை துவங்க 20 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகின்ற 31-ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் விவசாயிகளை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

மேலும்,சம்பா சாகுபடி தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் உழவு மானியம் ஏக்கருக்கு 600 ரூபாய் என 5 லட்சம் ஏக்கருக்கு மட்டும் அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்றும். அதனை தவிர்த்து உழவு மானியத்தை சம்பா சாகுபடியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்தவர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மோட்டார் பாசனம் மூலம் நிலத்தடி நீரை வைத்து குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், அதை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

பேட்டி- சண்முகம், மாநில பொதுச் செயலாளர் ,தமிழ்நாடு விவசாய சங்கம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.