ETV Bharat / state

அரசு பொது நிவாரண நிதி: தருமபுரம் ஆதீனம் சார்பில் ரூ.11 லட்சம் நிதி அளிப்பு!

நாகப்பட்டினம் : தருமபுரம் ஆதீனம் சார்பில் கரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 11 லட்சம் நிதியை ஆதினம் 27ஆவது குருமகா சந்நிதானம் வழங்கினார்.

தருமபுரம் ஆதீனம் சார்பில் ரூ.11 லட்சம் பொது நிவாரண நிதி அளிப்பு!

author img

By

Published : May 16, 2021, 7:03 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் தருமபுரம் ஆதீனம் சார்பில் கரோனா நிவாரண நிதிக்காக, தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சத்துக்கான காசோலையை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ”கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு காட்டும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, திருபுவனம், திருப்பனந்தாள், திருவையாறு ஆகிய ஆதீனக் கோயில்கள் சார்பில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினசரி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் தருமபுரம் ஆதீனம் சார்பில் கிராமங்களில் இரண்டாயிரம் பேருக்கு தினசரி கபசுரக் குடிநீர் வழங்கப்படும். நோய் நீங்குவதற்காக ஆதீன திருமடத்தில் ”அவ்வினைக்கு இவ்வினை” என்கிற திருநீலகண்ட திருப்பதிகம், ”மந்திரமாவது நீறு" தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்டு வருகிறது. பொதுமக்களும் வீட்டில் இவற்றை பாடிப் பிரார்த்தனை செய்து தொற்று நீங்க இறைவனை பிரார்த்திப்போம்” என்றார்.

இதையும் படிங்க : டாக்டே புயல்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.