மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் மறைந்த தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாளுக்கு வீட்டின் வாசலிலேயே சிலை அமைத்து வழிபட்டு வந்ததன் மூலம் இப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர்.
இவர் கடந்த மாதம் 15ஆம் தேதி தனது 73ஆவது பிறந்தநாளை தனது தாய், மனைவியின் சிலை முன்பு கொண்டாடினார். இந்நிலையில், இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்ற மதன்மோகன், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மதன்மோகனின் உடல் மயிலாடுதுறையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், அரசு கொறடா கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார் உள்ளிட்டப் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: அருந்ததியர் குடியிருப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு