ETV Bharat / state

ONGC-யால் கேடு தரும் குடிநீர்; தொடர்கதையான உடல்நலக்குறைவு... அரசு மருத்துவ முகாம் அமைக்கக் கோரிக்கை - தொடர்கதையான வியாதிகள் பல

கிராம மக்கள் ஒஎன்ஜிசி எண்ணெய் கலந்த சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதால் சிரங்கு, அரிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒஎன்ஜிசி கிணறுகளை அப்புறப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஈழவளவன்
ஈழவளவன்
author img

By

Published : Mar 21, 2022, 10:37 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, சேத்திரபாலபுரம் ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன், ஒஎன்ஜிசி கிணறுகள் மூலம் அப்பகுதியில் மக்களுக்கு நோய்ப்பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் அதனால், அவற்றின் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் பாதிக்கப்பட்ட கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், 'குத்தாலம் தாலுகா, சேத்திரபாலபுரம் ஊராட்சியில் ராமாமிர்தம் தெரு, குப்பையன் காலனி, சோனாந்திடல் ஆகியத் தெருக்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியின் அருகே ஒஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக் கிடங்கு உள்ளது.

எண்ணெய் கலந்த குடிநீர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமிக்கப்பட்டு பின்னர், சுத்திகரிப்பு செய்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நரிமணத்திற்கு அனுப்பப்படுகிறது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை

இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒஎன்ஜிசியால், பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும்; கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக குடிநீரில் கடுமையான காவி படிந்தும், எண்ணெய் கலந்தும் வருவதால் தொடர்ச்சியாக பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சுகாதாரக் கேடு - பாதிப்பில் மக்கள்

இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிக அளவில் சிரங்கு, தோல்அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் இந்த தண்ணீரைப் பருகிய 10-க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரையில் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் பகுதியில் சுகாதாரத்துறை முகாம் அமைத்து மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இப்பகுதியில் மண் மற்றும் நீரை ஆய்வுக்கு உட்படுத்தி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

போராட்டம் நடத்தப்படும்

அதுவரை ஊராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; பாதிப்பை ஏற்படுத்தும் ஒஎன்ஜிசி எண்ணெய் சேமிப்புக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்மன்ற சந்திப்பில் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த நடிகர் அருண் விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.