ETV Bharat / state

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக மாற்ற வலியுறுத்தி கடையடைப்பு

நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மூன்று நாள் கடையடைப்பு போராட்டத்தில் வர்த்தக சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையடைப்பு போராட்டம்
author img

By

Published : Jul 19, 2019, 3:19 PM IST

திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரித்து தென்காசி, செங்கல்பட்டு என இரண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவித்தார். அதேபோல் கும்பகோணமும் புதிய மாவட்டமாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இதுபற்றி அறிவிப்பு வெளியிடாததால், மயிலாடுதுறை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் காட்சி

எனவே, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அப்பகுதி மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், வழக்குரைஞர் சங்கத்தினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, மயிலாடுதுறை முழுவதும் இன்று முதல் கடையடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், மேலும் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் தொடரும் என வர்த்தக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி மயிலாடுதுறையில் 3 நாட்கள் கடை அடைப்பு போராட்டம். மயிலாடுதுறை வர்த்தக சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. வர்த்தகர்கள் பேரணி சென்று ஆர்ப்பாட்டம்:-

Body:மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை கோட்ட மக்கள் கால் நூற்றாண்டுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று வெளியான அறிவிப்பு மயிலாடுதுறை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் கடையடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் மேலும் 2 நாட்கள் கடைகள் அடைக்கப்படும் என்றும், உண்ணாவிரத போராட்டம், மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் மயிலாடுதுறை வர்த்தக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் கடைவீதியில் பேரணியாக சென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேட்டி :- செந்தில்வேல் - வணிகர் சங்கத் தலைவர், மயிலாடுதுறை.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.