ETV Bharat / state

நீர்வள மேலாண்மை விழிப்புணர்வு முகாம்: ஆசிரியர்கள் பங்கேற்பு! - NSS

நாகை: மழைநீர் சேகரிப்பு,  நீர்வள மேலாண்மை குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

awareness-program
author img

By

Published : Jul 17, 2019, 3:51 PM IST

நாகையில் தேசிய பசுமைப் படை சார்பாக, நீர் மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நீர்வள மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ”நாகை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பை செயல்படுத்த வேண்டும், பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, பள்ளி வளாகத்தை பசுமையாக்குதல், பள்ளிகள் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், கழிவு நீரை பயன்படுத்தித் தோட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், நாகை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் வேதரத்தினம், பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன் தேசிய பசுமைப் படை உதவி ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Intro:நாகையில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வள மேலாண்மை குறித்த ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் ; 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு.
Body:நாகையில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வள மேலாண்மை குறித்த ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் ; 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு.

தேசிய பசுமைப்படை சார்பாக, நீர் மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கு நாகையில் இன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வீடுகளிலும், பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்தும், மறுசுழற்சி மூலம் நீரை சேமித்தல் in அவசியம் குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பை செயல்படுத்த வேண்டும், பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பள்ளி வளாகத்தை பசுமையாக்குதல், பள்ளிகள் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், கழிவு நீரை பயன்படுத்தி தோட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஏறி மேலே இருந்து நாகை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் வேதரத்தினம் பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன் தேசிய பசுமை படை உதவி ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.