நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரிலிருந்து கீழத்தெரு கிராமத்திற்கு செல்லும் 3 கிலோ மீட்டர் சாலை பழுதடைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. சாலைகள் சரி செய்யப்படாமல் கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கீழத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் கிராமத்திற்குள் வருவதில்லை என்றும், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாடகை வாகனங்கள் கூட கிராமத்திற்கு வருவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், 12 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் சாலையை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.