நாகப்பட்டினம் குத்தாலம் ஒன்றியம், பழையகூடலூர் ஊராட்சி சார்பில் அப்பகுதியில் 10ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் “சிகரம் தொடு” என்ற தன்னம்பிக்கை புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத்தலைவர் இரா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்கள் மாணவ மாணவிகளுக்கு தேர்வை பயமின்றி எதிர்கொள்ளுதல், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சியளித்தனர்.
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பழையகூடலூர் ஊராட்சி மன்றம் ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், பழையகூடலூர் ஊராட்சி பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்களின் உயர் கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களும், உதவிகளும் செய்யப்படும் என பழையகூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.பாண்டியன் தெரிவித்து மாணவர்களை வாழ்த்தினார்.
இதையும் படிங்க: செவிலியர் ஆண்டு கொண்டாட்டப்பேரணி - மாணவர்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு!