நாகப்பட்டினம் அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.
அரசு அறிவிப்பின்படி அப்பணிகள் அங்கு தொடங்கப்படாததால், அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடந்த 4 நாள்களாக சாமந்தான்பேட்டை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி பேச்சுவார்த்தைக்கு முன் வராததால், விரக்தியடைந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று சாமந்தான்பேட்டை கடற்கரையில் குடும்பத்துடன் படகுகளில் நின்றுகொண்டு வலைகளை தங்கள் மீது போர்த்தியவாறு, அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அரசு அறிவித்த தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் கட்டாததை கண்டித்து மீனவர்கள் வலைகளுக்குள் தஞ்சமடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீனவர்களின் போராட்டத்திற்கு நாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள் ஆதரவு தெரிவித்துவருவதால், சாமந்தன்பேட்டை மீனவர்களின் போராட்டம் நாகப்பட்டினத்தில் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.
இதையும் படிங்க: நாகையில் வலுக்கும் மீனவர் போராட்டம், பெருகும் ஆதரவு!