நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 16 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் முதுகலைப் பட்டதாரி பெண் பிரியா (23) என்பவர் 204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து பிரியா கூறுகையில், "எனது தாய்தந்தை அளித்த ஊக்கத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். என்னை வெற்றிபெறச் செய்த கிராம மக்களுக்கு சேவை செய்வேன்.
மொத்தமுள்ள 54 ஊராட்சிகளில் மன்னம்பந்தல் ஊராட்சியை முதன்மையாக்கப் பாடுபடுவேன். அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்கள் வரை செல்ல உழைப்பேன்" என்றார். பிரியாவின் தந்தை பெரியசாமி, தாய் சசிகலா ஆகிய இருவரும் தனியார் கல்லூரி பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளை சேருங்கள்!’ - விவசாயிகள் கோரிக்கை