நாகப்பட்டினம்
சீர்காழி அருகே பூம்புகாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிலப்பதிகார கலைக்கூடத்துடன் இணைந்த சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. கடற்கரையில் அமைந்த பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுலாத்தலம் இதுவாகும்.
இங்கு ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட நாள்களில் மக்கள் கூடுவது வழக்கம். அதேபோல் காணும் பொங்கலான நேற்று பூம்புகார் கடற்கரையில் குடும்பத்தோடு கொண்டாட நாகை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான மக்கள் பூம்புகார் சுற்றுலாத் தலத்தில் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
காணும் பொங்கல் கோலப்போட்டி
காணும் பொங்கலையொட்டி சீர்காழியில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில், பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விதவிதமான வண்ணவண்ணக் கோலங்களைப் போட்டு அசத்தினர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி
காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முக்கொம்பு சுற்றுலாத்தலத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் நீரையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அங்குள்ள பூங்காவில் பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை உற்சாகமாக விளையாடினர்.
பொதுமக்கள் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. மக்களின் வசதிக்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க: காணும் பொங்கல் - திருவிழாவான ஒகேனக்கல்