நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக புதுத்தெரு பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஓடிச் சென்று பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டியில் சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் ஓட்டப்பந்தயம், ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது.
பெற்றோர்களும் பொதுமக்களும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். இதேபோல் எம்.ஜி.ஆர் நகரில் சைக்கிளில் மெதுவாக செல்லும் போட்டி நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படிங்க: