ETV Bharat / state

கல்லீரல் பிரச்னையால் காவலர் தூக்கிட்டு தற்கொலை! - கல்லீரல் பிரச்னையால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு பிரிவு காவலர் ஒருவர் கல்லீரல் பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்லீரல் பிரச்னையால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
Police man committed suicide in Nagapattinam
author img

By

Published : Sep 5, 2020, 7:12 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் அருகேவுள்ள கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் நாகை மதுவிலக்குப்பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு, துர்கா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த ஆறு மாதங்களாக கல்லீரல் பிரச்னையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 4) நாகையில் பணிமுடிந்து மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியிலுள்ள மாமனார் வீட்டிற்குச் சென்றார். இரவு கல்லீரல் பிரச்னையால் துடித்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிவக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.