நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் சூரி. இவரின் மருமகன் ஆனந்த் (32) சில நாள்களுக்கு முன்பு லண்டனிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். இவருக்குப் பெங்களூரு விமான நிலையத்தில் கரோனா கண்டறிதல் சோதனை நடத்திய மருத்துவக் குழுவினர், எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதிசெய்த பின்புதான் அனுப்பிவைத்தனர். தற்போது, ஆனந்த் குத்தாலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், லண்டனிலிருந்து வந்துள்ள ஆனந்துக்கு கரோனா பாதிப்பு உள்ளதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து தப்பிவந்துள்ளதாகவும் குறுஞ்செய்தி வாட்ஸ்அப்பில் பரவியுள்ளது. இதைப் பார்த்த ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில், விசாரணை தொடங்கிய காவல் துறையினர், மயிலாடுதுறை திருமஞ்சன வீதியைச் சேர்ந்த கில்லி பிரகாஷ் (36) என்பவரைக் கைதுசெய்தனர்.
இவர் மீது பொதுமக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பி பீதி உருவாக்குவது, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குடும்பப் பிரச்னையில் சித்தப்பாவை கொன்ற மகன் கைது