நாகையை அடுத்த நாகூர் வெட்டாற்றில் ஆற்று மணலை சில கும்பல் திருடி வருவதாக தொடர் புகார் எழுந்து வந்தது. இதையடுத்து ஆற்றில் சிலர் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வெட்டாறு அருகே நடத்திய சோதனையில் மாட்டு வண்டிகளில் மர்மநபர்கள் மணல் அள்ளுவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த 5 மாட்டு வண்டிகளை கைப்பற்றிய போலீசார், உரிமம் இல்லாமல் மணல் அள்ளிய தெத்தி கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.