ETV Bharat / state

ஓசியில் மீன் கேட்டு போலீசார் தொல்லை என ஆட்சியரிடம் புகார்.. காவல்துறை விளக்கம் என்ன? - ஓசியில் மீன் கேட்டு தொந்தரவு

ஓசியில் மீன் கேட்டு தொந்தரவு செய்யும் காவல்துறையினர், மீன் தர மறுத்ததால் சாராய வழக்கில் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுப்பதாக கையில் மீன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மீன் வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசியில் மீன் கேட்டதாக காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு

author img

By

Published : Nov 28, 2022, 10:49 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் காரைக்காலில் இருந்து ஐஸ் பெட்டியில் மீன் வாங்கி வந்து பாலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது போலீசார் தன் மீது சாராயம் விற்றதாக பொய் வழக்கு போட்டதாகவும், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து 15 நாள் காவல் நிலையத்தில் கையொப்பமிட்ட போது ஒவ்வொரு நாளும் பணம் மற்றும் ஓசியில் மீன் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் மீன் வியாபாரி ஐயப்பன் புகார் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு இதுகுறித்து புகார் மனு அனுப்பிய நிலையில் பாலையூர் காவல் நிலையத்தில் மீண்டும் சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாகவும், தொடர்ந்து மூன்றாவது முறை என்ன வழக்கு என்றே தெரியாத முறையில் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என ஐயப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ”எங்கள் மீது புகார் அளிக்கிறாயா?” என்று கேட்டு, உன்னை மீது ரவுடி பட்டியலில் சேர்க்கும் வகையில் பிரிவு 110ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அமைதியான முறையில் மீன் விற்பனை செய்து வரும் தன்னை காவல்துறையினர் அச்சுறுத்துவதாகவும் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு கையில் மீன்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தார்.

ஓசியில் மீன் கேட்டதாக காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு: நடந்தது என்ன

இது தொடர்பாக மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் கேட்டபோது, ”சம்பந்தப்பட்ட நபர் காரைக்காலில் இருந்து மீன்களுக்கு கீழே சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து கிராம பகுதியில் விற்பதாகவும், இது தொடர்பாக ஆதாரத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளோம். பாலையூர் காவல்துறையினர் ஓசியில் மீன் கேட்டதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு” என்று பதில் அளித்தார்.

இதையும் படிங்க: செக் மோசடி வழக்கில் சிவாஜி மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.