ETV Bharat / state

திருக்கண்ணங்குடி பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா! - கும்பாபிஷேகம்

நாகை: பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

perumal-temple
author img

By

Published : Jul 11, 2019, 4:29 PM IST

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இங்கு அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்த நாயகி சமேத தாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோயில், பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான தலமாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களில் பாடப்பட்ட இக்கோயில், ராமானுஜர், மணவாள மாமுனிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாக குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் குடமுழுக்கு இன்று யாகசாலை பூஜையுடன் நிறைவுற்று, வேத விற்பன்னர்கள் திரு மந்திரங்கள் ஓத கோயிலில் சுற்றி அமைந்துள்ள அனைத்து கும்ப கலசத்தின் மீது புனித நீர் ஊற்ற மாபெரும் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Intro:பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான திருக்கண்ணங்குடி, தாமோதர நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

Body:பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான திருக்கண்ணங்குடி, தாமோதர நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம். நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கண்ணங்குடி அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்த நாயகி சமேத தாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோவில், பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான தலமாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் விளங்குகிறது. திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களில் பாடப்பட்ட இக்கோவில், ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தளமாக குறிப்பிடப்படுகிறது. வசிஷ்ட முனிவர் வேண்ணெய் கொண்டு வடித்த பூஜித்து வந்த கிருஷ்ணன் விக்ரகம் கிருஷ்ண பரமாத்மா தின்று லீலை செய்ததுடன் மகிழம் பூ மரத்தடியில் தவமியற்றும் முனிவர்களுக்கு இறைவன் ஸ்ரீ கிருஷ்ணன் காட்சி அளித்தது தலமாகவும் விளங்கும் இத்தலம், ஆன்மீக புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலின் குடமுழுக்கு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்,கடந்த திங்கட்கிழமை முதல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது இன்று ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் நிறைவுற்று யாகசாலையிலிருந்து வேத விற்பனர்கள் கடலை சுமந்து மேளதாளம் முழங்க புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து வேத விற்பனர்கள் திரு மந்திரங்கள் ஓத கோவிலில் சுற்றி அமைந்துள்ள அனைத்து கும்ப கலசத்தின் மீது புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.