உலகை அச்சுறுத்திவரும் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு தேவைகளுக்காக மக்கள் யாரும் வெளியில் சுற்றக்கூடாது எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காவலர்களும் மக்கள் வெளியே வருவதைத் தடுக்க முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டுவரும் தற்காலிக காய்கறிச் சந்தைக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வருகின்றனர். தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் பொருள்களை வாங்க காய்கறிச் சந்தையில் மக்கள் குவிகின்றனர்.
ஆபத்தை உணராத பொதுமக்கள் இதுபோன்று வெளியில் சுற்றுவது கரோனா பரவலுக்கு வித்திடும் என்பதால், இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனா போலீஸ பாத்திருப்பீங்க... கரோனா ஆட்டோவ பாத்திருங்கிங்ளா'