மயிலாடுதுறை: கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக லலிதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக, பால்பண்ணை பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் நிலத்தை தருமபுரம் ஆதீனம் தானாமாக வழங்கினார்.
அந்த இடத்தில், ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தை, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேசுகையில், “நிலம் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமானது என்றாலும், நாங்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு விவசாயம் செய்து வருகிறோம். உடனடியாக நிலத்தை கையப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.
அவர்களுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை. இதனால் வெறுப்படைந்த அலுவலர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூருக்கு கடத்திவரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்