ETV Bharat / state

கரோனா பயமா எங்களுக்கா? - மெத்தனம் காட்டும் மக்கள் - கரோனா பயமின்றி வேளாங்கண்ணி மக்கள்

நாகை: கரோனா தொற்று குறித்து சிறிதும் அச்சமின்றி முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்க நியாயவிலைக் கடையில் குவிந்தது அவர்களின் மெத்தனப்போக்கை காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா பயமா எங்களுக்கா? - மெத்தனம் காட்டும் மக்கள்

author img

By

Published : Jul 20, 2020, 3:37 PM IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உத்திரை மாதா கோயில் அருகே அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

ஆனால், பொருள்கள் கையிருப்பு இல்லாத காரணத்தால் முறையாகப் பொருள்கள் வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதாகக் கூறிய நிலையில் காலை முதல் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடை முன்பு குவிந்தனர்.

நாகை மாவட்டத்தில் கரோனோ பாதிப்பு 400ஐ கடந்துள்ள சூழலில், முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்தது கரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை உண்டாக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி ரேஷன் கடையில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென்றும் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. பொதுமக்களின் இதுபோன்ற செயல்கள், அவர்களின் மெத்தனப்போக்கை காட்டுவதோடு மட்டுமல்லாமல் கரோனா தொற்று பரவலுக்கும் வழிவகுக்கிறது என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க; கரோனாவிலிருந்து குணமடைந்த சகோதரியை குத்தாட்டம் போட்டு வரவேற்ற தங்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.