நாகை மாவட்டம், சீர்காழியில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர், ' திமுக தலைவராக கருணாநிதியை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் தான். கருணாநிதி என் பக்கத்து ஊர்க்காரர் என்பதால் அவர் அரசியலில் கெட்டிக்காரராக இருக்கிறார். தமிழ்நாடு மக்களாகிய உங்களுக்கு அனைத்தும் நாங்கள் செய்து விட்டோம். ஆனால் நீங்கள்தான் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என உள்ளாட்சித் தேர்தல் தோல்வி' குறித்து ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர், 'தினகரன் என்பவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொண்டு திரிந்தார். தற்போது இருக்கும் இடமே தெரியாமல் சென்றுவிட்டார்' என விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்கள்: ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி