நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாகப் பேருந்துகளை இயக்குவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நாகையிலிருந்து செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேகமாகச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நாலுவேதபதி பகுதிக்குச் செல்லும் இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு நூலிழையில் ஓட்டிச் செல்கின்றன.
பின்னால் வரக்கூடிய பேருந்திற்கு வழிவிடாமல் வேகமாகச் செல்லும் தனியார் பேருந்து, அதனை முந்திச் செல்ல வேண்டுமென போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் மற்றொரு பேருந்து செல்வதைப் பார்த்து பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வேகமாகச் செல்லும் தனியார் பேருந்துகளின் மூலம் இந்தப் பகுதியில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வேகமாகப் பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க : தனியார் பேருந்துடன் அரசுப் பேருந்து மோதல்: தூக்கி வீசப்பட்ட பயணிகள்!