ETV Bharat / state

கானல் நீரான காவிரி! - கிராம மக்களுடன் தூர்வாரி மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்! - Prathaabaraamapuram panchayat leader restore water way

மழையும் இல்லை, காவிரி நீரும் இல்லை இனிவரும் காலங்களில் விவசாயமும் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சிய பிரதாபராமபுரம் கிராம மக்களுக்குப் புதுமையான வழிகாட்டியாக ஊராட்சி மன்றத் தலைவர் தோன்றியிருக்கிறார்.

கானல் நீரான காவிரி நீர்...கிராம மக்களுடன் தூர்வாரி மீட்டெடுத்த ஊராட்சி மன்ற தலைர்!

author img

By

Published : Jun 24, 2020, 10:40 PM IST

Updated : Jun 25, 2020, 6:32 AM IST

’நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்ற மூதுரைப் பாடல் நெற்பயிருக்குப் பாய்ச்சும் நீரில் புல்லும் வளரும் என எடுத்தியம்புகிறது. ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரத்தில் நெற்பயிர்களுக்கே நீரின்றி விவசாயம் பொய்த்தது.

விவசாய நிலம் சூழ்ந்து இருக்கும் இந்தக் கிராமத்திற்கு திருநெல்லிக்காவல் பிரிவு 2 வடிகால் வாய்க்காலானது பாசன வசதியை அளித்துவருகிறது. ஆனால் நீண்டகாலமாக தூர்வாரப்படாததால் காவிரி நீரில் விவசாயம் செய்வது இக்கிராம மக்களுக்கு எட்டாக் கனியாகியது.

கானல் நீரான காவிரி நீர் - கிராம மக்களுடன் தூர்வாரி மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்!

மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் பழைய சந்திரமதி வாய்க்கால் வழியாக சுமார் 5 கி.மீ. பயணித்து பிரதாபராமபுரம் வழியாகச் சென்று கடலில் வீணாகக் கலக்கிறது. இதைக் கண்டு வேதனைப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் சிவராசு தனது கிராம மக்களின் விவசாயத்தை மேம்படுத்த ஏதேனும் செய்ய வேண்டும் என முடிவுசெய்தார்.

சிவராசு, பிரதாபராமபுரத்திற்குப் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர். பட்டதாரி இளைஞரான இவருக்கு விவசாயத்தின் மீது அதீத பற்று. இந்தப் பற்றுதான் அவரை காவிரி நீரை பயனுள்ளதாக மாற்ற உந்தித்தள்ளியது. இது குறித்து அவரிடமே கேட்டோம்.

“ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட வாய்க்கால் பழைய சந்திரமதி. இதனைப் பல ஆண்டுகளாகத் தூர்வாராமல்விட்டதால் மேட்டூர் அணையிலிருந்து எங்கள் ஊருக்குத் தண்ணீர் வரத்து இல்லை. இனியாவது காவிரிநீரை ஊருக்குள் கொண்டுவர இந்த வாய்க்காலைத் தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் வீணாகக் கடலில் கலக்கும் நீரை எங்கள் ஊருக்குக் கொண்டுவருவோம். இந்த நீரை 120 ஏக்கர் அளவில் எங்களூரில் அமைந்துள்ள ஏரிகளில் சேமிக்கவுள்ளோம்” என்றார்.

இந்தப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் மட்டும்தான் காவிரி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு சந்திரமதி வாய்க்கால் தூர்வாரப்படாமல் பாழாய்போனது விவசாயிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியது. சுமார் 500 ஏக்கர் மானாவாரி நிலம் சாகுபடி செய்ய முடியாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது கரோனா நெருக்கடிக்கு மத்தியில் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக நிதியை பொதுப்பணித் துறையை அணுகிக் கேட்கும்போது, தற்போதைய சூழலில் நிகழாண்டு குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் பணிகள் ஏதும் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைகளால் ஊராட்சி மன்றத் தலைவர் சிவராசு சோர்ந்துவிடவில்லை. எடுத்த முயற்சியில் இருந்து கொஞ்சமும் பின்வாங்காமல் கிராம மக்களிடமும், தன்னார்வலர்களிடமும் கலந்தாலோசித்தார். இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பெண்கள், கிராம மக்கள், தன்னார்வலர்கள் உள்பட சிவராசும் களத்துக்குச் சென்று தூர்வாரும் பணியைத் தொடங்கினர்.

ஊராட்சி மன்றத் தலைவருடன் கைகோத்த மக்கள்

கிராம மக்களின் ஒற்றுமையினால் இவ்வூரிலுள்ள மூன்று பெரிய ஏரிகள், 46 குளங்கள் இடையிலான நீர் வழிப்பாதைகள் சுமாராக 7 கி.மீ. தூரம் வரை சீரமைக்கப்பட்டுவருகின்றன. ஊர் மக்கள் வாய்க்காலைத் தூர்வாரினாலும், அரசு இந்த வாய்க்காலை அகலப்படுத்துவதோடு ஆழத்தையும் மேம்படுத்தியும் தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கைவிடுக்கின்றனர்.

2004ஆம் ஆண்டு சுனாமி கடற்கரையோர விவசாய நிலங்களை உவர்த்தன்மையுள்ளதாக மாற்றியது. தற்போது காவிரி நீர் கிடைக்கப்பெற்றால் சுமார் 1,100 ஏக்கர் விவசாய நிலம் நல்ல முறையில் விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’அஞ்சு வருசமா டேங்க் மட்டும்தான் இருக்கு... குடிக்கத் தண்ணீர் இல்ல’ : ஏமப்பூரில் அவலம்

Last Updated : Jun 25, 2020, 6:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.