ETV Bharat / state

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக வெட்டப்படும் பனைமரங்கள்! - மரங்களை நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழியில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக 70 ஆண்டுகளைக் கடந்து பலன் தரும் பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. சாலை அமைத்தவுடன் கூடுதல் மரங்களை நடவு செய்ய பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு வழிச்சாலை பணிக்காக வெட்டப்பட்டு வருகிறது பனைமரங்கள்!

author img

By

Published : Nov 8, 2022, 6:21 PM IST

மயிலாடுதுறை: விழுப்புரம் மாவட்டம் தொடங்கி நாகை மாவட்டம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்பணிக்காக பழைய சாலைகளின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 ஆண்டுகளைக் கடந்த புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் எஞ்சியிருந்த பனைமரங்கள் வெட்டும் பணி கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

பனை மரம் வளர்ந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னரே பலன் கொடுக்கத் தொடக்கும். இவ்வாறு சாலையோரம் வளந்த பனைமரங்களில் இருந்து ஏழை எளிய மக்கள் பனை நுங்கு வெட்டி எடுத்து கோடைகாலத்தில் விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.

சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. 50 அண்டுகள் முதல் 70 ஆண்டுகளைக் கடந்த பனை மரங்கள் இயந்திரங்கள் மூலம் நொடிக்கு ஒன்றாக வெட்டி வீழ்த்தப்படுவது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக வெட்டப்படும் பனைமரங்கள்!

இயற்கை வழங்கிய கோடைகால வருவாயான பனை மரங்கள் வெட்டப்பட்டது, அதனை நம்பியிருந்த ஏழை வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மரத்தில் வாழ்ந்த பறவைகள், குரங்குகள் இடம் பெயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் சாலையோரம் அதிக மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:EWS 10% இட ஒதுக்கீடு: வரும் நவ.12-ல் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக்கூட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.