நாகை மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி இந்த ஆண்டு பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த கனமழையால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி சேதமடைந்திருப்பதாகவும், நாகை மாவட்டத்தில் 16,250 ஹெக்டேரும், மயிலாடுதுறையில் 19,600 ஹெக்டேரும் பாதிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் கல்யாண சுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை முதல் முதல்கட்டமாக 120 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்றும், இது படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.