நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, நெல்லின் மாதிரிகளை சோதனைக்காக டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் சுப்ரமணியன் தலைமையில் மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் யாதேந்திர ஜெயின், யூனூஸ், ஜெய்சங்கர், பசந்த் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: குமரியில் கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை