ETV Bharat / state

மனமகிழ் மன்றங்களில் விதிமீறி உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மது விற்பனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு - ADEQUATE ACTION SHOULD BE TAKEN

விதி முறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 6:16 PM IST

மதுரை: மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா? என்பது குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை செயலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தரப்பில் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. ஆனால் மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் தனியார் மது கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது விற்க முடியும். ஆனல் தமிழகத்தில் FL 2 என்ற உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் சட்ட விரோதமாக உறுப்பினர் அல்லாதவருக்கும் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.
இவ்வாறு விதிகளை மீறும் மனமகிழ் நிறுவனங்களின் பதிவுகளை பதிவு துறை ரத்து செய்யலாம். ஆனால் மனமகிழ் மன்றங்கள் அதற்கான விதிமுறைகளை மீறி செயல்பட்டாலும் அரசியல் பின்புலம் கொண்டவர்களில் தலையிட்டால் அதன் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதில்லை. இவை தொடர்பாக நடவடிக்கை கோரி பதிவு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தின் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, விதி மீறி செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையும் படிங்க:"பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டுமா?"- உயர்நீதிமன்றம் வேதனை!

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பல மனமகிழ் மன்றங்களில் பொதுமக்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதால், நாள் முழுவதும் செயல்படும் மதுக்கடையாக மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் திலக் குமார் ஆஜராகி மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மாதந்தோறும் இரண்டு தடவை வட்டாட்சியர் உள்ளிட்ட துறை அதிகாரிகளால் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், "மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை . விதிகளை முறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே அனைத்து மனமகிழ் மன்றங்கள் விதிப்படி செயல்படுகிறதா? என்பதை பதிவு துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை செயலர் மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.