மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புரெவி புயல் கனமழை காரணமாக தீர்த்தக்குளம் நிரம்பி தண்ணீர் கோயிலுக்குள் புகுந்துள்ளது. இந்தக் குளம் நிரம்பினால் அந்தத் தண்ணீர் அருகிலுள்ள செட்டிகுளத்திற்குச் சென்று வடிவது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோயில் குளத்திலிருந்து செட்டிகுளத்தில் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி தீர்த்தக்குளம் நிரம்பி வெள்ளநீர் கோயிலுக்குள் புகுந்து மாயூரநாதர், அபயாம்பிகை சன்னதியில் புகுந்துள்ளது.
கோயில் நிர்வாகத்தினர் ஐந்தாவது நாளாக மோட்டார் மூலம் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவருகின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் மழைக் காலங்களில் மழைநீர் குளத்திலிருந்து கோயிலுக்குள் புகுந்துவருவது வாடிக்கையாக உள்ளதாகவும், உடனடியாக குளத்திலிருந்து தண்ணீர் வெளியே செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நண்பர்களுடன் குளிக்கச்சென்ற ஒருவர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மரணம்!