நாகப்பட்டினம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.
உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த பொழுது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவில் மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததால் மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது