நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாலங்காடு, புஞ்சை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 2 பேருக்கு கரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்தவமனை கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் புட்டபர்த்தியில் சிக்கி கொண்ட குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளை சேர்ந்தவர்கள் 36 பேர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்தபோது, அதில் திருவாடுதுறையை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் தரங்கம்பாடி தாலுக்கா புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பாண்டிச்சேரி மாநிலத்தில் வேலைக்கு மீண்டும் பணியில் சேர்வதற்காக கரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையின் முடிவில் அவருக்கும் கரோனா தொற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இருவருக்கும் கரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதால், சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். ஏற்கனவே மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒருவர் கரோனா சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இருவரையும் சேர்த்து மொத்தம் 3 பேர் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரும் வசித்த பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ஜெயஸ்ரீ கொலை வழக்கு: நியாயம் கேட்டு போராட முயன்ற வழக்கறிஞர் நந்தினி கைது!